திருப்பூர், பிப்.12-
திருப்பூர் செவந்தாம்பாளையத்தில் தனியார் ஆக்கிரமிப்பை அகற்றி நூலகம் அல்லது சமுதாய நல கூடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இம்மனுவில் கூறியிருப்பதாவது ,எங்கள் ஊரில் அரசு புறம்போக்கு நிலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நூலகம் அல்லது சமுதாய நலக்கூடம் அமைத்துதர கோரி பலமுறை விண்ணபித்திருந்தோம். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தனிநபர் ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து இருந்தார். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். அதிகாரிகள் மனு சம்பந்தமாக ஆய்வு செய்து அந்த இடத்தை யாரும் பயன் படுத்த கூடாது என்று கூறினர். ஆனால், இப்பொழுதும் யாருடைய அனுமதி இல்லாமல் சம்பந்தப்பட்ட நபர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டிக்கொண்டு இருக்கின்றார். அவரிடம் யாரேனும் இது சம்பந்தமாக கேட்டால் தகாத வார்த்தைகளில் பேசி மிரட்டல் விடுக்கிறார். ஆகவே மாவட்ட நிர்வாகம் அந்த ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்படும் வகையில் நூலகமோ அல்லது சமுதாய நல கூடமோ அமைத்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave A Reply