வன்முறையை தூண்டும் வகையில் பேசிய ஜீயர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரியது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக கடந்த ஜனவரி 26ஆம் தேதி திருச்செங்கோட்டில் பேசிய சிறீவில்லிபுத்தூர் ஜீயர், ‘‘ஆண்டாளை விமர்சிப்பவர்கள் மீது சோடா பாட்டில் வீச தெரியும்’’ என்று கூறினார்.

இது கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதால் ஜீயர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி திராவிட விடுதலை கழக நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வைரவன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், இதுதொடர்பாக திருச்செங்கோடு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டார்.

Leave A Reply