பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் தொடர் பயணத்திட்டங்கள் கொண்ட பயணிகளின் விண்ணப்பங்களை ஏற்பதற்கு ஏதுவாகவும் விண்ணப்பகால நீட்டிப்பை தவிர்க்கவும் ”சிறப்பு பாஸ்போர்ட் மேளா” வை சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் வரும் பிப்ரவரி 17 அன்று நடத்தவிருக்கிறது.

சாலிகிராமம்,தாம்பரம், அமைந்தகரை ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் பாஸ்போர்ட் சேவை அலுவலங்கள் வரும் பிப்ரவரி 17 ஆம் நாள் வழக்கமான வேலை நாளாக இயங்கும். விண்ணப்பங்கள் வழக்கம்போல ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒதுக்கப்பட்ட நேரங்களில் பரிசீலிக்கப்படும்.இந்த சிறப்பு ஏற்பாட்டின் மூலம் தோராயமாக 2050 விண்ணப்பதாரர்கள் பயனடைவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த பாஸ்போர்ட் மேளாவில் பங்கு பெற விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் அலுவலகத்தின் www.passportindia.gov.in என்ற வலைதளத்தில் பதிவு செய்து விண்ணப்ப பதிவு எண்(ARN:Application Register Number)ஐப் பெற்று அதற்கான கட்டணத்தை செலுத்தி நேரம் பெற வேண்டும்.

இந்த மேளாவில் பங்கு பெறும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவு எண் (ARN), கொடுக்கப்பட்ட நேரம் ஆகிவற்றுக்கான நகல்(print out), தேவையான அனைத்து அசல் ஆவணங்கள் சான்றொப்பமிட்ட ஒரு படி(ARN) நகலாவணங்கள் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுக வேண்டும். புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பிப்பு தத்கல் (print out) மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். மற்றும் பிசிசி(cpoy) பிரிவில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டது.

பிப்ரவரி 17 ஆம் நாள் நடைபெறவிருக்கும் இந்த மேளாவிற்கான நேர ஒதுக்கீடுகள் பிப்ரவரி 14 ஆம் நாள் (பிற்பகல்) 14:30 மணி இணையத்தில் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் கட்டாயமாக இணையத்தில் பதிவு செய்யப்பட்ட நேர ஒதுக்கீடுகளின் அடிப்படையிலேயே பரிசீலிக்கப்படும்.
பதிவு செய்து நேர ஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள். காவல்துறை அனுமதிச் சான்றிதழுக்கான விண்ணப்பங்கள், நிறுத்தி வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் மறுக்கப்பட்ட டோக்கன்கள் மேளாவில் அனுமதிக்கப்பட மாட்டாது.

Leave A Reply

%d bloggers like this: