திருவனந்தபுரம்,

கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இன்று ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு சொந்தமான சாகர் பூஷன் கப்பலின் பராமரிப்பு பணி நடைபெற்றது. அப்போது கப்பலில் இருந்த டேங்கர் வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கப்பலில் பிடித்த தீயை அணைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: