குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 435 பிரிவின் கீழ் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய முடியாது என்பதை எதிர்த்து நளினி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 1ஆம் தேதி அரசாணையும் வெளியிட்டது.

அதில், இந்திய குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 435வது பிரிவின் கீழ் சிபிஐ போன்ற மத்திய விசாரணை அமைப்பு விசாரித்த வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதை எதிர்த்து, ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக 27 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு வழக்கின் பின்னணியை ஆராயக் கூடாது என்றும், முன் கூட்டியே விடுதலை செய்யும் நடைமுறையை அனைத்து கைதிகளுக்கும் சமமாக அமல்படுத்த வேண்டும் என்றும், அந்த அரசாணையில் 435 பிரிவின் கீழ் விடுதலை செய்யக் கூடாது என்பது சட்டவிரோதம் என்றும் கூறியுள்ளார். இந்த வழக்கு புதனன்று (பிப். 14) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: