சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் 7க்கு உட்பட்ட 79வது வார்டு ராக்கி திரையரங்கம் பேருந்து நிறுத்தம் அருகில் செங்குன்றம் நெடுஞ்சாலை ராம்நகர் சந்திப்பில் கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

இந்த இடத்தின் அருகே தேநீர் கடை, உணவகம் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. மேலும் இதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் அங்கிருப்பவர்கள் கூறுகிறார்கள். சாலை மட்டத்திலேயே சாக்கடை பள்ளம் உள்ளதால் இரவு நேரங்களில் பலர் விழுந்து விபத்து ஏற்படுவதாகவும், பலமாதங்களாக இப்படியே திறந்து கிடப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: