நாமக்கல், பிப்.13-
நாமக்கல் அருகே கல்லுபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் மனுவில் கூறியிருப்பதாவது: கல்லுபாளையத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகிறோம். எங்கள் ஊர் மக்கள் பயன்பெறும் வகையில் 3 ஆழ்துளை போர்கள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது 3 போர்களிலும் தண்ணீர் இல்லை, மேலும், காவிரி குடிநீரும் எங்கள் பகுதிக்கு விநியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் நாங்கள் குடிநீர் இன்றி லாரி தண்ணீரை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ஆகவே, தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.