மஸ்கட்:
பிரதமர் மோடியின் மத்திய ஆசிய பயணத்தின் ஒருபகுதியாக ஓமன் சுல்தான் காம்பஸ் ஸ்டேடியத்தில் இந்திய சமூகத்தினரை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியை மக்கள் புறக்கணித்ததால் காலியாக இருந்த இருக்கைகளை நோக்கி பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.மஸ்கட்டில் உள்ள இந்தியன் கிளப்பின் பொறுப்பில் இந்நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பெரிய அளவி லான பிரச்சாரத்துடன் பாஜகவினர் மக்களைத் திரட்ட ஏற்பாடு செய்திருந்தனர். வடஇந்தியாவைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ்காரர்களின் தலைமையில் இதற்காக பெரும் முயற்சி மேற்கொள் ளப்பட்டது.

30 ஆயிரம் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. 25 ஆயிரம் பேரை உறுப்பினராக கொண்ட கிளப்பின் பெரும்பகுதியினர் பங்கேற்கவில்லை. விஐபி, விவிஐபி, இருக்கைகளும் கூட காலியாக கிடந்தன. இதற்கிடையே சிலர் மோடிக்கு எதிரான பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். பாஜக ஆட்சி குறித்து வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஏற்ப ட்டுள்ள அதிருப்தியின் வெளிப்பாடே ஓமனில் மோடிக்கு கிடைத்த ஏமாற்றம்.

Leave A Reply

%d bloggers like this: