கோவை,பிப்-13-
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் 21 மாத ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் பணிபுரிந்த ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.அரங்கநாதன் தலைமை வகித்தார். இதில் மாநில செயலாளர் எஸ்.மதன், மாநில துணைத் தலைவர் எஸ்.சந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சேலம்:
சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். இதில் மாநில செயலாளர் எம்.முருகேசன், மாவட்ட செயலாளர் சுப்ரமணி, துணை நிர்வாகிகள் எஸ்.கே.தியாகராஜன், எ.நடராஜன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply