நியூசிலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்காமலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.இந்த தொடரில் இந்திய அணியைச் சேர்ந்த கம்லேஷ் நாகர்கோட்டி மிரட்டலான வேகத்தில் பந்து வீசி 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சீனியர் வீரர்கள் மட்டுமே 140 கிமீ வேகத்திற்கு கூடுதலான வேகத்திலும் பந்துகளை வீசுவார்கள்.ஆனால் சர்வதேச அனுபவம் அதிகம் இல்லாத இந்திய இளம் வீரர் கம்லேஷ் நாகர்கோட்டி 140 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் வீசியுள்ளதால் அனைவரும் ஆச்சரியத்தில் வியந்தனர்.

இந்நிலையில் கம்லேஷ் நாகர்கோட்டியை கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் பாராட்டிய நிலையில் ராஜஸ்தான் சட்டசபையில் பட்ஜெட் குறித்த அறிவிப்பில் நாகர்கோட்டிக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டலான வேகத்தில் பந்துவீசுவதால் இந்திய அணியில் விரைவில் இடம் பிடிப்பார் என அனைத்து தரப்பில் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: