அந்தமானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது  ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவாகி  உள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவின் 43 கிலோ மீட்டர் தூரத்தில் இன்று காலை 8.09 மணி அளவில் மிதமான  நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த  நிலநடுக்கம் நிலப்பரப்பில் இருந்து 10கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்ற முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: