ஸ்பானிஷ் கால்பந்து கிளப் போட்டியான லா லிகா தொடரில் பார்சிலோனா அணி முதலிடம் பிடித்தாலும் அத்லெடிகோ டி மாட்ரிட் அணியை விட கூடுதலாக 7 புள்ளிகள் மட்டுமே முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் பார்சிலோனா அணி எந்த நேரத்திலும் தரவரிசையில் முதலிடத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளது.பார்சிலோனா அணி 23 போட்டிகள் முடிவில் 18 வெற்றி 5 டிரா மூலம் 59 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.அத்லெடிகோ டி மாட்ரிட் 23 போட்டிகளில் 15 வெற்றி 7 டிரா, ஒரு தோல்வி என 52 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.வலென்சியா அணி 23 போட்டிகள் முடிவில் 13 வெற்றி 4 டிரா மூலம் 43 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திலும்,ரியல் மாட்ரிட் 22 போட்டிகளில் 12 வெற்றி, 6 டிரா, 4 தோல்விகள் மூலம் 42 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.