மின்வாரிய தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்து தொழிலாளர் நலத் துணை ஆணையர் சுமதி தலைமையில் சென்னையில் இன்று (பிப். 12) மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

கூட்டத்தின் போது அதிகாரிகள் பாதியிலேயே எழுந்து சென்றதால் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்துவிட்டது. பின்னர் தொழிற்சங்கத் தலைவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், தொழிலாளர் நல ஆணையர், வாரிய அதிகாரிகள், தொழிற்சங்க தலைவர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது.

இதனால் திட்டமிட்டபடி வரும் 16 ஆம் தேதி தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என்றனர்
வரும் 15 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று அன்றைய பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வோம். அதிலும் சுமூக தீர்வு காணப்படவில்லை என்றால் ஏற்கனவே திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அவர்கள் கூறினர்.

இந்தப் பேச்சுவாத்தையில் மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பில் எஸ்.எஸ். சுப்பிரமணியன், எஸ்.ராஜேந்திரன், பிஎம்எஸ் சார்பில் முரளி கிருஷ்ணன், எல்.எல்.ஓ சார்பில் சாலமோன், டி.என்.பி.இ.பி சார்பில் அருள் செல்வன் உள்ளிட்ட 10 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: