கோவை, பிப். 12-
மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த தொழிலாளர் விரோத பட்ஜெட்டை கண்டித்து கோவையில் திங்களன்று சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலையின்மைக்கு தீர்வு காண்க, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, குறைந்தபட்சம் ஊதியம் ரூ.18 ஆயிரம் என்பதை சட்டமாக்கு, பொதுத்துறை நிறுவன பங்குகளை கார்ப்ரேட்டுகளுக்கு விற்காதே உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோவை சிவானந்தா காலனி டாடாபாத் அருகில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் (பொ) எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆர்ப்பாட்ட நோக்கங்கள் குறித்து உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏராளமானோர் பங்கேற்று மோடி அரசின் தொழிலாளர் விரோத பட்ஜெட்டை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.