சேலம், பிப்.12-
பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பபெறக்கோரி திங்களன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி தலைமை விகித்தார். எஸ்யுசிஐ(சி) மாவட்ட செயலாளர் பி.மோகன், சிபிஐ (எம்எல்) மாவட்ட செயலாளர் கோ.மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாநில குழு உறுப்பினர்கள் பி.தங்கவேலு, கே.ஜோதிலட்சுமி, சிபிஐ(எம்எல்) மாநில குழு உறுப்பினர் எ.சந்திரமோகன், எஸ்யுசிஐ(சி) மாநிலகுழு உறுப்பினர் ஆர்.நடராஜன் மற்றும் இக்கட்சிகளின் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட இருநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர்.

நீலகிரி
நீலகிரி மாவட்டம், கூடலூர் புதியபேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கூடலூர் தாலூகா கமிட்டி செயலாளர் குஞ்சுமுகமது தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டக் செயற்குழு உறுப்பினர் என்.வாசு முன்னிலை வகித்தார். மேலும், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார், சிபிஎம் எருமாடு தாலுகா கமிட்டி செயலாளர் கே.ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கைதாகினர்.

Leave A Reply

%d bloggers like this: