திருப்பூர், பிப். 12-
பழங்கரை ஊராட்சியில் நடைபெற்றுள்ள நிதி முறைகேடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாவட்டக்குழு உறுப்பினர் பி.முத்துசாமி, சிபிஎம் முன்னாள் பழங்கரை ஊராட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் கிளைச் செயலாளர் தங்கராஜ் ஆகியோர் திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அறித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரைஅவிநாசி ஊராட்சி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி மன்றத் தலைவராக செந்தில்குமார் என்பவர் செயல்பட்டு வந்தார். அவரது தலைமையிலான ஊராட்சி நிர்வாகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தீன் கீழ் பெறப்பட்ட தகவலில், பழங்கரை ஊராட்சியில் ரூ.22.7 லட்சம் நிதியிழப்பு நடந்துள்ளதும், ரூ 21.7லட்சம் விதி மீறல் முறைகேடுகள் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், தீர்மானம் மற்றும் தலைவரின் அனுமதி இல்லாமல் ரூ 4.5 லட்சம் மதிப்பிற்கான பணிகள் நடந்துள்ளன. இதுமட்டுமல்லாமல் ரசீது இல்லாமல் செய்த செலவுகள் என ரூ.2.2 கோடி போன்ற முறைகேடுகள் பழங்கரை ஊராட்சியில் நடந்துள்ளது. ஆகவே, இதன் மீது உரியவிசாரனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.