பீஜிங்,

சீனாவின் ஹேபேய் மாகாணத்தில் இன்று பிற்பகல் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சீனாவின் ஹேபேய் மாகாணத்தில் உள்ள லங்பாங் நகரை மையமாக கொண்டு இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக தலைநகர் பீஜிங்கில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து இது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Leave A Reply