தீக்கதிர்

கரூர் : மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

கரூர்,

குளித்தலை அருகே மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லெட்சுமணம்பட்டியில் தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் அருந்ததி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.