துபாயில் உள்ள உலகின் மிக உயரமான ஓட்டல் இன்று திறக்கப்படுகிறது.
துபாயில் ஜிவோரா என்று பெயரிடப்பட்ட உலகின் உயரமான ஓட்டல் இன்று திறக்கப்படுகிறது. இந்த ஓட்டலில் 528 அறைகள் உள்ளன. 75 மாடி கொண்ட இந்த கட்டிடம் 356 மீட்டர் உயரம் கொண்டது. 355 மீட்டர் உயரத்தில் அங்குள்ள மேரியார்ட் மார்க்குயிஸ் ஓட்டலை விட இது ஒரு மீட்டர் அதிக உயரம் கொண்டது. இந்த ஓட்டல் ஜிவோரா என்று பெயரிடப்பட்டுள்ளது. தங்க நிறத்தில் மின்னும் ஓட்டல் ஜிவோரா இன்று திறக்கப்படுகிறது.
துபாயில் புர்ஜ் அல் அராப் ஓட்டல் 321 மீட்டர் உயரமும், ரோஸ் ரேஹன் ஓட்டல் 333 மீட்டர் உயரமும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply