ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பயணிகளை ஏற்றி சென்ற ஜீப் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர்.

 ஜார்க்கண்ட் மாநிலம் டும்கா மாவட்டத்தில் 10 பயணிகளுடன் சென்ற ஜீப் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவலர்கள், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.