மாஸ்கோ, பிப். 11-
ரஷ்யாவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 71 பேர் பலியாகி யிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சரதோவ் ஏர்லைன்சுக்கு சொந்தமான ஏ .என் -148 ரக விமானம் மாஸ்கோவின் டொமொ டி டொவோ என்ற விமான நிலையத்தில் இருந்து ரஷ்ய-கஜகஸ்தான் எல்லையில் உள்ள ஓர்ஸ்க் எனும் இடத்துக்குப் புறப்பட்டது. 65 பயணிகள், விமானக்குழுவைச் சேர்ந்த 6 பேர் என 71 பேருடன் பயணித்த அந்த விமானம், திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது மாஸ்கோ அருகே ராமன்ஸ்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விழுந்து நொறுங்கிய தாகக் கூறப்படுகிறது. இந்த விமானத்தில் பயணித்த யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுவதால், 71 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானத்தைத் தேடி மீட்புப் படைகள் விரைந்துள்ளன. மோசமான வானிலை காரணமாக விமானம் விழுந்து விபத்துக்குள் ளான இடத்திற்கு நடந்து மட்டுமே செல்ல முடியும் எனவும், வாகனங்களில் செல்லவாய்ப்பில்லை என்பதால் மீட்பில்தாமதமாகலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். விமான விபத்து குறித்து சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: