திருச்செங்கோடு, பிப்.11 –
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அகில இந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அகில இந்திய அஞ்சல் துறை ஆர்.எம்.எஸ்.ஒய்வூதியர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட 3 வது மாநாடு திருச்செங்கோடு வி.வி. அரங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில், அகில இந்திய அஞ்சல் துறை மாவட்ட தலைவர் பி.சின்னண்ணன் தலைமை வகித்தார். பி.கே.ராமசாமி வரவேற்றுப்பேசினார். சங்கத்தின் மாநில உதவி பொதுசெயலாளர் என்.சண்முகம் துவக்கவுரையாற்றினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் த.மணி வேலை அறிக்கையையும். பொருளாளர் ஏ.ராஜீ வரவு செலவு அறிக்கையும் முன்வைத்தனர், முன்னதாக மாநாட்டை வாழ்த்தி சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.சந்தானராமன்,மாநில உதவி தலைவர் எம்.சிதம்பரம்,மாநில உதவி பொதுச்செயலாளர் டி.நேதாஜி சுபாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டை வாழ்த்தி என்எப்பிஎப் நாமக்கல் கோட்ட செயலாளர் வி.ஈஸ்வரன் மற்றும் கே.சுப்பிரமணியன், எம்.சம்பத்குமார்.எம்.அன்பழகன் உள்ளிட்ட தோழமை சங்க நிர்வாகிகள் உரையாற்றினர். இதில். புதிய பென்சன் திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும், ஓய்வுதியத்தில் சமத்துவம் வழங்க வேண்டும், கமலேஸ் சந்திரா கமிட்டி சிபாரிசுகளை உடனடியாக அமல்படத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு:
இம்மாநாட்டில் சங்கத்தின் மாவட்ட தலைவராக மணிமாறன், செயலாளராக பி.கே.ராமசாமி , பொருளாளராக ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.