திருப்பூர், பிப். 11 –
திருப்பூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற (லோக் அதாலத்) நிகழ்வில் ரூ.12 கோடி இழப்பீடு வசூலிக்கப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வு திருப்பூர் மாவட்டத்தில் சனியன்று நடைபெற்றது. இதில், திருப்பூரில் இரு அமர்வுகளிலும், மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா நீதிமன்றங்கள் சேர்த்து மொத்தமாக 15 அமர்வுகளிலும் நடைபெற்றது. திருப்பூரில் மக்கள் நீதிமன்ற நிகழ்வுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான (பொறுப்பு) எம்.கே.ஜமுனா தலைமை வகித்தார். முதன்மை சார்பு நீதிபதி ஏ.முரளிதரன், தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெகநாதன் முன்னிலை வகித்தனர்.

மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மோகன ரம்யா, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் கவியரசன், பழனி, நித்யகலா மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கலந்து கொண்டு வழக்குகளை விசாரித்தனர். இதில், மோட்டார் வாகன விபத்துகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சிறுகுற்ற வழக்குகள், சிவில் வழக்குகள், வங்கி
வராக்கடன் வழக்குகள் என 2510 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில், 1497 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, ரூ.12 கோடியே 18 லட்சத்து 81 ஆயிரம் சமரச முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக பெற்றுத் தரப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.