ஈரோடு, பிப்.11-
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலகுழு மற்றும், அல் அமீன் சங்கம், ஐடிஒ அறக்கட்டளை சார்பில் சிறுபான்மை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கான சிறப்பு முகாம் ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.

இதில், பாரத் பிரஷ் கௌரவத் தலைவர் எ.ஷாஹீல் ஹமீது தலைமை வகித்தார். பி.பி.அக்ரஹாரத்தின் முன்னாள் பேரூராட்சி தலைவர் அப்துல்காதர் வரவேற்றார். கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் சர்வேசன் தம்கோ கடன் உதவிகள் குறித்த விளக்கி பேசினார். சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை குறித்து மதரஸா இஸ்லாமிய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என்.முகம்மது ஹனீபா பேசினார். ஈரோடு கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் கமேஷா, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில பொதுச்செயலாளர் ப.மாரிமுத்து, மாவட்ட தலைவர் கே.எஸ்.இஸாரத் அலி உட்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக, ஈரோடு சம்பத்நகர் கூட்டுறவு வங்கியின் சார்பில் 50 பேர்களுக்கு மளிகை கடன் அளிப்பதாக வங்கி மேலாளர் உறுதியளித்தனர். மேலும், வரும் ஜூன் மாதம் கல்வி, உதவித்தொகை மற்றும் கல்விக்கடன் குறித்த சிறப்பு முகாம் பி.பி.அக்ரஹாரத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: