கோவை, பிப். 11 –
மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மாநாடு நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. மக்கள் கோரிக்கைக்கான பல்வேறு தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது கோவை மாவட்ட மாநாடு செவ்வாயன்று கோவை மணியகாரன்பாளையம் கிருஷ்ணகவுண்டர் திருமண மண்டபத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. முன்னதாக பிப்ரவரி 13 ஆம்தேதி சின்னியம்பாளையத்திலிருந்தும், ஸ்டேன்ஸ் மில் முன்பிருந்தும் கணபதிபுதுரிலிருந்தும், கோவில் பாளையத்திலிருந்தும் தியாதிகள் ஜோதி, கொடி மரம், கொடி, பிரச்சாரபயணம் துவங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு மாநாட்டு திடலை வந்தடைகிறது. இதனைத்தொடர்ந்து நடைபெறும் பொதுமாநாட்டில் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக்கான போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடிகளின் வாழ்வின் ஒருபகுதியை ஆவணப்படுத்தி எழுதியுள்ள கோவை மண்ணில் செங்கொடியின் வேர்கள் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

மேலும், தமிழகமே எழுக பாடல்ஒலிப்பேழை வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டு நிகழ்வுகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் அ.சவுந்திரராஜன், பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர். இதனைத்தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறும் பிரநிதிகள் மாநாட்டில் கோவை மாவட்ட மக்களின் பிரச்சனைகள் குறித்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.