திருப்பூர், பிப். 11 –
தமிழக அரசின் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், பல்வேறு நிலையில் பணிபுரிந்து வரும் மகளிருக்கு 50 சதவிதம் மானியம் மற்றும் கடன் தொகையில் இருசக்கர மோட்டார் வாகனம் வழங்க, தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளைச் சார்ந்த மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு பிப்ரவரி 10-ஆம் தேதி மாலை 5 மணி வரை நிர்ணயிக்கப்பட்டது.இந்நிலையில் மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றிய, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் நேரடியாக மற்றும் பதிவுத் தபால் மூலமாக, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் 13 ஆயிரத்து 886 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: