சண்டிகர்:
விலங்குகள் நல வாரிய அலுவலகம் சென்னை திருவான்மியூரிலிருந்து ஹரியானாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.விலங்குகள் நல வாரிய அலுவலகம் சென்னை, திருவான்மியூரின் மூன்றாவது கடற்கரை சாலையில் அமைந்திருந்தது. தற்போது இந்த அலுவலகம் ஹரியானாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பிற்கான முன் அனுமதி, தடையில்லாச் சான்றிதழ் போன்றவை பெறவேண்டுமெனில், இனி ஹரியானாவில் உள்ள பரிதாபாத் நகரில் அமைந்துள்ள அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பட வேலைகளில் தாமதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் கருதுகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: