புதுச்சேரி:
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிகமான நிதியை, நரேந்திர மோடி அரசு ஒதுக்கீடு செய்வதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி, மத்திய அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் தேர்தல் அறிக்கை போல உள்ளதாகவும், ஓராண்டுக்கான பட்ஜெட்டில் ஐந்தாண்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. தங்கள் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கவில்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதல்வர் நாராயணசாமி, “பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் மத்திய அரசின் மூலம் கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது; ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி குறைவாக வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பாஜக அணுகுகிறது” என்று குற்றம் சாட்டினார்.

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், நாராயணசாமி அரசுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை இருந்து வருகிறது. அரசின் திட்டங்களைச் செயல்படுத்த கிரண் பேடி ஒப்புதல் தர மறுக்கிறார் என்று புதுச்சேரி காங்கிரஸார் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: