வாஷிங்டன்:
விண்ணுக்கு அனுப்பப்பட்ட டெஸ்லா கார் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் களமிறங்காமல் தொடர்ந்து விண்வெளியில் பயணித்துக் கொண்டிருக்கிறது.விண்ணில் மிதக்கும் விண்கற்களுக்கு மத்தியில் செயற்கைக்கோள் உள்ளிட்ட பொருட் கள் மட்டுமே மிதந்து வந்தன. மனிதர்களை செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களுக்கு அனுப்பு வதற்கான பணிகளில் ஈடுபடும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், முதன்முறையாக மனிதர்களின் மகிழுந்தான காரை பொம்மை மனிதருடன் அனுப்பியது பால்கான் ஹெவி 9 எனும் ராக்கெட்
சுமந்து சென்ற டெஸ்லாவின் ரெட் ரோஸ்டர் கார் அதிக உந்து சக்தியின் காரணமாக ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்கான பூமிக்கும், செவ்வாய்க்கும் மத்தியில் உள்ள புவி வட்டப் பாதையில் களமிறங்கவில்லை. மாறாக விண்வெளியின் ஆழமான பகுதிக்கு தொடர்ந்து பயணிக்கிறது. இது, எரிகற்களின் மீது மோதி சேதமாகவும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.