புதுதில்லி:
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், பூல்பூர் மக்களவை தொகுதிகளுக்கும் பீகாரின் அராரியா மக்களவைத் தொகுதிக்கும் மார்ச் 11-இல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், பூல்பூர் தொகுதிகளின் எம்.பி.க்களான யோகி ஆதித்யநாத்தும், கேசவ் பிரசாத் மவுரியாவும் தத்தம் பதவியை ராஜினாமா செய்தனர். முதல்வர், துணை முதல்வர் பதவியை ஏற்கும்வகையில் அவர்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அந்த 2 இடங்கள் காலியாக உள்ளன. பீகார் மாநிலம் அராரியா மக்களவை உறுப்பினர் முகமது தஸ்லிமுதீன் மறைந்ததைத் தொடர்ந்து, அத்தொகுதியும் காலியானது. இதனால், இம்மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கான வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 20-ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 14-இல் நடைபெறுகிறது.

பீகாரின் பபுவா மற்றும் ஜெகனாபாத் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மார்ச் 11-இல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: