புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப்பயணமாக பாலஸ்தீனம், ஐக்கிய அரபு நாடுகள், ஓமன் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.தனது சுற்றுப்பயணத்தில் முதல் நாடாக பாலஸ்தீனம் செல்கிறார். இதற்காக இன்று நண்பகலில் தனி விமானம் மூலம் பிரதமர் மோடி பாலஸ்தீனம் புறப்பட்டார்.
ஜோர்டான் செல்லும் பிரதமர் மோடி, தலைநகர் அம்மானில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பாலஸ்தீனத்தின் ரமல்லா நகருக்குச் செல்கிறார். இந்த பயணத்தின் போது பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸை சந்தித்து பேசுகிறார்.பின்னர் பிப்ரவரி 10-ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பாலஸ்தீனத்துக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். மோடியின் பாலஸ்தீன சுற்றுப்பயணம் வரலாற்றுப்பூர்வமானது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.