லண்டன்:
மனிதக் கரு முட்டைகளை முழு முதிர்ச்சி அடையும் வரை ஆய்வகத்தில் வளர்ப்பதில், அறிவியலாளர்கள் வெற்றி கண்டுள்ளனர். ‘மூலக் கூறியல் மனித மறு உற்பத்தி’ என்ற மருத்துவ ஆய்விதழில் எடின்பர்க்கில் உள்ள மருத்துவமனை ஆய்வகத்திலும், நியூயார்க்கில் உள்ள மனித இனப்பெருக்க ஆய்வு மையத்திலும் நடத்திய சோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.அதில், ஏற்கெனவே எலியின் கருமுட்டையை முழு முதிர்ச்சி அடைவதற்கு முந்தைய நிலை வரை வளர்த்து வெற்றி கண்டதாகவும், இதே போல் மனிதக் கரு முட்டையையும் முழு முதிர்ச்சிக்கு முந்தைய நிலை வரை வளர்த்து வெற்றி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கருமுட்டையில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா என்ற ஆய்வு தற்போது நடந்து வருகிறது. இந்த சோதனையும் வெற்றி பெற்றால், குழந்தையின்மைக்கான எளிதான தீர்வு கிடைக்கும் என ஆய்வில் ஈடுபட்டவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.