தென்னாப்பிரிக்கா மண்ணில் 4 முறை ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி இதுவரை ஒருநாள் போட்டி தொடரை வென்றது கிடையாது.
இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை வெல்ல வாய்ப்புகள் பிரகாசமாக உள்ள நிலையில் தொடரை வென்று புதிய சாதனை படைக்குமா? என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் ஆவலுடன் ஜோஹன்ஸ்பர்க் ஒருநாள் போட்டியை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.4-வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற சிறப்பு பெருமையை விராட் கோலி பெறுவார்.
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியின் தொடர் தோல்வியால் விரக்தி அடைந்து காணப்படும் தென்னாப்பிரிக்கா அணி பச்சை வண்ண ஜெர்சியை மாற்றி பிங்க் வண்ண ஜெர்சியை அணிய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.இருப்பினும் போட்டி தொடங்கும் நேரம் தான் முடிவு செய்யப்படும் என்பதால் தென்னாப்பிரிக்கா வீரர்கள் எந்த வண்ண ஜெர்சியை அணியப் போகிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.