சேலம், பிப். 8-
தமிழக அரசு வழங்கிய பணத்தை முழுமையாக வழங்காத ஜி.வி.கே. ஈ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்தை கண்டித்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு வழங்கிய பணத்தை முழுமையாக வழங்காமல் முறைகேடு செய்த ஜி.வி.கே. ஈ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்தை கண்டித்தும்,108 ஆம்புலன்ஸ் பெண் ஊழியர்கள் தங்குவதற்கு இருப்பிட வசதி செய்துதர வேண்டும். மகளிருக்கு தனியாக கழிவறை வசதி செய்துதர வேண்டும். 8 மணிநேர வேலை நேரத்தை உறுதிபடுத்த வேண்டும்ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வியாழனன்று 108ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். இதில் சங்க நிர்வாகிகள் குமரேசன், அர்ஜீன் உள்ளிட்டுதிரளான தொழிலாளர்கள்கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

கோவை:
இதேபோல், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தீபு பிரதீப் தலைமை வகித்தார். மண்டல துணைத்தலைவர் சிவகாமி, மாவட்டப் பொருளாளர் பாலாஜி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: