மோடி தலைமையிலான பாஜக அரசு அந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்காததோடு, முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டையும் செய்ய மறுத்திருக்கிறது. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன் படி இன்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் மக்களின் முழு ஆதரவோடு  வெற்றிகரமாக நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தின் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
ஒன்று பட்ட ஆந்திர மாநிலம், தெலுங்கான மற்றும் ஆந்திரா என இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. அப்போது மாநில உள்கட்டமைப்பு மற்றும் மாநில நலன்களுக்காக சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என பாஜக அறிவித்தது.
ஆனால் மோடி அரசு சமர்ப்பித்துள்ள 2018-19  பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மேலும் மாநில வளர்ச்சிக்காக ரயில்வே, கடப்பா இரும்பு தொழிற்சாலை, விசாகப்பட்டினம் மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தை புறக்கணிக்கும் மோடி அரசை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பாக முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஜனசேனா, லோக் சத்தா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிந்திருந்தன.
இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆந்திர மாநில மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதையடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று நடைபெற இருந்த இண்டர்மீடியட் ( பிளஸ் – 1, 2) செயல்முறை தேர்வுகள் வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. பல்கலைக்கழகங்களில் நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் மாநிலம் முழுவதும் பெரும் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி வழங்காததைக் கண்டித்து இன்று இடதுசாரி கட்சிகள் அழைத்த முழு அடைப்புக்கு, 11,500 அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயங்கவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.
கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன.  நெடுஞ்சாலைகளில்  வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. திரையரங்குகள் பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டன, உணவகங்கள் , சந்தைகள் அடைக்கப்பட்டன. ஆட்டோ , பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களும் இயங்கவில்லை.
போராட்டம்
இதற்கிடையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடதுசாரி கட்சிகளின் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றது. இதில் ஜனசேனா, காங்கிரஸ், ஒய்,எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றன. பல இடங்களில் போராட்டங்களையே வாலிபால், கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களை நடுரோட்டில் விளையாண்டு தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இடது சாரிகள் மோடி அரசின் பாரபட்சமான நடவடிக்கைக்கு எதிராக அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.