திருப்பூர், பிப். 8 –
திருப்பூர் தபால்நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கடந்த டிசம்பர் 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசும்போது, திருப்பூரில் புதிய தபால் நிலையமும், பாஸ்போர்ட் சேவை மையமும் அமைக்க கோரிக்கை விடுத்தேன். இதனடிப்படையில், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதன் மீது நடவடிக்கை எடுத்து ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும், திருப்பூரில் புதிய தபால் நிலையக் கட்டிடம் கட்ட இயலாது என்றும், எனினும் தற்போது இங்குள்ள ஏதேனும் ஒரு தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையத்தை அமைத்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கும் ஏற்பாடுகள் முழுமையடைந்தவுடன் விரைவில் திருப்பூர் தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.