புதுதில்லி, பிப்.8-

தலித்/பழங்குடியினர் நலன்கள் தொடர்பான பல சட்டமுன்வடிவுகள் நிலுவையில் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் பி.எல. புனியா (காங்கிரஸ்) கோரினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதனன்று, மாநிலங்களவையில். அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பி.என். புனியா பேசியதாவது:

தலித்/பழங்குடியினர் நலன்கள் தொடர்பான பல சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்படாமல் அரசாங்கத்தால் கிடப்பில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில்  இருந்து வருகின்றன. 2008ஆம் ஆண்டு தலித்/பழங்குடியினர் இடஒதுக்கீடு (அஞ்சல் மற்றும் சேவைகள்) சட்டமுன்வடிவு மக்களவையில் கடந்த நான்க ஆண்டுகளாகக் கொண்டுவரப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதேபோன்று தலித்/பழங்குடியினர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு சட்டமுன்வடிவும், மனித மலத்தை மனிதர்கள் சுமப்பதற்குத்  தடை விதித்திடும் சட்டமுன்வடிவும் இவ்வாறே நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவரப்படாமல் கிடப்பில் கிடக்கின்றன. இவற்றை நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் கொண்டுவந்து நிறைவேற்றிட மத்திய அரசு முன்னுரிமை அளித்திட வேண்டும்.

இவ்வாறு பி.எல். புனியா கோரினார்.

Leave A Reply