திருப்பூர், பிப். 8 –
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆயத்தஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (ஏஇபிசி) துணைத் தலைவராக ஏ.சக்திவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன்மூலம் 2018, 2019 ஆகிய இரு ஆண்டுகளுக்குத் துணைத் தலைவராக இவர் செயல்படுவார். இதன் தொடர்ச்சியாக 2020 ஆம் ஆண்டு முதல் இரு ஆண்டுகள் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார். ஏற்கெனவே 1998, 2004, 2012 ஆகிய மூன்று முறை இவர் ஏஇபிசி தலைவராக இருந்திருக்கிறார். தற்போது திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் கௌரவத் தலைவராக இருக்கும் ஏ.சக்திவேல், இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தென் பிராந்தியத் தலைவராகவும், இந்திய அமெரிக்க வர்த்தகக் கழகத்தின் தலைவராகவும்பதவி வகித்து வருகிறார். அத்துடன் 1 கோடியே 20 லட்சம்தொழிலாளர்கள் பணியாற்றும் ஆயத்த ஆடை, செயற்கையாடைகள், கைத்தறி தொழிலில் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: