கோவை, பிப்.8-
கோவை டாஸ்மாக் மண்டலத்தை பொருத்தவரை கோவை, தெற்கு, வடக்கு, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளது. இதில் சுமார் 800க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதன் மண்டல அலுவலகம் மற்றும் டாஸ்மாக் குடோன் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ளது. பல ஆண்டுகளாக மண்டல அலுவலகம் இங்கு செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் மற்றும் குடோன் இருக்கும் இடம் தனியாருக்கு சொந்தமானது. மாதம் தோறும் சுமார் ரூ.5 லட்சம் வரை வாடகை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த இடம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருப்பதால்குடோனுக்கு வரும் லாரிகள் ஆங்காகங்கே சாலையில் நிறுத்தப்பட்டு வருகிறது. மேலும் வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு போதிய இடவசதியும் இல்லை. இதையடுத்து மண்டல அலுவலகத்தை இடமாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே, இதற்காக கோவை பீளமேடு ரயில்நிலையம் அருகே உள்ள இந்திய உணவு கழகம் (எப்சிஐ) உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு பல ஏக்கர் காலியிடம் மற்றும் குடேன்கள், அலுவலகங்கள் உள்ளது. அரசுக்கு சொந்தமாக இந்த இடத்தில் வாடகையும் குறைவே. எனவே, இந்த பகுதியில் மண்டல அலுலகத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக கோவை மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளர் வெங்கடேசன், காலல்துறை அதிகாரி பாலசுப்பிரமணியன், கோவை வடக்கு டாஸ்மாக் மேலாளர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் புதனன்று மாலை பீளமேடு ரயில்நிலையம் அருகே உள்ள இந்திய உணவு கழகம் இடத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது: இடப்பற்றாக்குறை மற்றும் வாடகை காரணமாக மண்டல அலுவலகம் மற்றும்குடோனை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தமாத இறுதிக்குள் மண்டல அலுவலகம் மற்றும் குடோன் இடமாற்றம் செய்யப்படும் என்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.