கரூர்,

கரூரில் ஆசிரியர் ஒருவர் மாணவரை கத்தியால் குத்தியதை அடுத்து காவலர்கள் அவரை கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் மணவாடியில் உள்ள ஆசிரமம் என்ற தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ரஹ்மான் பள்ளியில் உள்ள கிரிக்கெட் கிளப் மற்றும் தனியார் கிரிக்கெட் கிளப்பிலும் விளையாடி வந்துள்ளார். தனியார் கிரிக்கெட் கிளப்பில் விளையாடு தொடர்பாக மாணவர் ரஹ்மானுக்கும் ஆசிரியர் பன்னீர்செல்வத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆசிரியர் பன்னீர்செல்வம் தான் வைத்திருந்த கத்தியால் மாணவரை குத்தி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பன்னீர்செல்வத்தை கைது செய்துள்ள காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: