நாமக்கல், பிப்.7-
ராசிபுரம் அருகே மயானத்திற்கு செல்லும் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்தஆர்.புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சானார்புதூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:- சானார்புதூரில் 200 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் உள்ள மயனாத்திற்கு செல்லும் சாலையை சிலர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்து கொண்டுள்ளனர். இதனால் எங்கள் ஊர் மயானத்திற்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலையுள்ளது. மேலும்,கிராமத்தில் யாராவது இறந்து போனால் சடலத்தை மயானத்திற்கு எடுத்து செல்ல முடியாது அவலநிலை உள்ளது. எனவே, தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து மயானத்திற்கு செல்லும் சாலையை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.