போபால்,
மத்திய பிரதேசத்தில் மணல் லாரி கவிந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அலிராஜ்பூர் என்ற இடத்தில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் டயர் பள்ளத்தில் சிக்கி திடீரென நடு ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியின் மேற்புறம் அமர்ந்து இருந்த தொழிலாளர்கள் 8 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
16 தொழிலாளர்கள் அமர்ந்து இருந்ததாகவும் 8 தொழிலாளர்கள் காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உள்ளூர் காவல் துறையினர் தெரிவித்தனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தையடுத்து தலைமறைவாகிய ஓட்டுநரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.