புவனேஸ்வர்,

ப்ரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கக்கூடிய ப்ரித்வி-2 ஏவுகணை இன்று சோதனை செய்யப்பட்டது. ஒடிசா கடற்கரையில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை 350 கி.மீ., தூரத்திற்கு சென்று தாக்கும் வல்லமை கொண்டதாகும். இந்த ஏவுகணை ஒரே சமயத்தில் 500 முதல் 1000 கிலோ எடையுள்ள ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. ப்ரித்வி-2 ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: