தில்லி,

நாடு முழுவதும் பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ளார்.

2015 – 17 ஆண்டுகளில் நாடு முழுவதும் பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் மாநிலங்களவையில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் 15 வழக்குகளில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ராஜஸ்தானில் 3 வழக்குகளில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திரிபுராவில் 3 வழக்குகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டில் 47 வழக்குகளில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 41 வழக்குகளில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தில் 6 வழக்குகளில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திரிபுராவில் 5 வழக்குகளில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டில், 28 வழக்குகளில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்திரிகையாளர் மீதான தாக்குதலில் ஏதேனும் அமைப்பு அல்லது நிறுவனங்களுக்கு தொடர்பு இருக்கிறதா என தெரியவில்லை என்றார்.

Leave A Reply

%d bloggers like this: