ஈரோடு,பிப்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக உள்ள கந்தசாமி, வருவாய் துறை, வளர்ச்சி துறை மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கும்போது தகாத வார்த்தைகளில் பேசுவதும், ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களை தரக்குறைவாக நடத்துவது என்று தொடர்ந்து ஊழியர் விரோத போக்கோடு செயல்பட்டு வருகிறார். இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அம்மாவட்ட அரசு ஊழியர்களை, ஆர்ப்பாட்ட பகுதிக்கே வந்த மிரட்டியுள்ளனர்.

இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் புதனன்று அரசு ஊழியர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜே.பாஸ்கர்பாபு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.வெங்கிடு, மாவட்ட பொருளாளர்  வி.உஷாராணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் சங்க நிர்வாகிகள் ரங்கசாமி, பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

சேலம்:
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் சி.கே.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் தமிழ்செல்வி கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், வருவாய் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அர்த்தனாரி உள்ளிட்டு திரளான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.