தூத்துக்குடி, பிப்.7-
தமிழகம் முழுவதும் மக்கள் சந் தித்து வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது மாநில மாநாடு குறித்த விளம்பரங்கள் மாவட்டம் முழுவதும் மக்களது கவனத்தைஈர்க்கும் வகையில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தூத்துக்குடியில் மாநில மாநாடு என நான்கு மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட உடன் முதல் பணியாக மாவட்டத்தின் அனைத்து முக்கியமான ஊர்களிலும் சுவர் விளம்பரங்கள் எழுதினோம். அது மக்கள் மத்தியில் மாநாடுகுறித்த முதல் தகவலை கொண்டு சேர்த்ததாக கூறினார். கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன். கடந்த நான்கு மாதவெயில், மழையால் பல வண்ணங்களில் எழுதப்பட்டிருந்த சுவரெழுத்துக் கள் சற்று மங்கியிருந்த நிலையில் அவற்றுக்கு புத்துயிரூட்டி, மெருகேற்றும் பணியில் தற்போது கல்யாணி,குமார் உள்ளிட்ட ஓவியர்கள் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டு விளம்பரப்பணியை கடந்த 2 மாதங்களாக இவர்கள் இடைவிடாமல் மேற்கொண்டுள்ளனர்.

பிப்.17இல் துவங்கி 20ஆம் தேதிவரை மாநில மாநாடு நடைபெறவிருக்கும் வி.பி.சிந்தன், கே.முத்தையாநினைவரங்க (ஏவிஎம் கமலவேல் மஹால்) முகப்பு, உள் அரங்கம், 20ஆம்தேதி தூத்துக்குடி-மதுரை சாலையில் உள்ள சங்கரப்பேரி விலக்கில் அமையவிருக்கும் பொதுக்கூட்ட மேடைக்கான பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. வழக்கமான பிளாஸ்டிக் பிளக்ஸ் அல்லாமல் மரச்சட்டங்களில் துணி அடித்து மார்க்சிய தலைவர் களின் வண்ண வண்ண உயிர் ஓவியங்களை வெண்புறா, மாரிமுத்து தலைமையிலான குழுவினர் தூரிகையால் தீட்டி வருகின்றனர். மாநாடு மற்றும்கருத்தரங்க அழைப்பிதழ், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், விளம்பர பதாகைகள் போன்றவற்றின் வடிவமைப்பை வாசுதேவன் மேற்கொண்டு வருகிறார்.

ஸ்டிக்கர் வெளியீடு:
சிபிஎம் மாநில மாநாட்டு தகவலை உள்ளடக்கிய ஸ்டிக்கர் செவ்வாயன்று நடந்த மாவட்டக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் வெளியிட இந்திய மாணவர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் அமர்நாத் பெற்றுக்கொண்டார்.

Leave A Reply

%d bloggers like this: