மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெலுங்கானா மாநில இரண்டாவது மாநாடு நல்கொண்டாவில் நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற செஞ்சட்டை பேரணி நடைபெற்றது. நிறைவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவலு, சுதந்திர போராட்ட வீரரும் முதுபெரும் தலைவருமான மல்லு ஸ்வராஜ்யம், மாநிலச் செயலாளர் தம்மினேனி வீரபத்ரம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாடு தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ஏப்ரலில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டை பேரெழுச்சியுடன் நடத்திடவும் மாநாட்டு பேரணியில் லட்சக்கணக்கான மக்களை அணிதிரட்டவும் தெலுங்கானா மாநில மாநாடு உறுதியேற்றது.

Leave A Reply

%d bloggers like this: