கோவை, பிப்.7-
கோவையில் தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளியன்று நடைபெறுகிறது.

கேவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறையில் வேலையளிப்போர் மற்றும் வேலை தேடுவோருக்கான முகாம் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்மாதத்திற்கான முகாம் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வெள்ளியன்று (பிப்.9) நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10, 12ம் வகுப்பு, பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்கள், ஐடிஐ முடித்தவர்கள் என அனைத்து தரப்பு இளைஞர்களும் பங்கேற்கலாம். இதில் தனியார் துறையினர் பங்கற்று தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாம் முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்றும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசு வேலை கிடைக்கும் வரை தொடர்ந்து தங்களின் பதிவுகளை புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: