திருப்பூர், பிப்.7-
அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள நல்லாற்றில் கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.

திருப்பூர் மாவட்டம், அங்கேரிபாளையம் உள்பட சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் கோழி இறைச்சிக் கடைகளில் இருந்து கொண்டு வரப்படும் கோழிக் கழிவுகள், நல்லாற்றில் கொட்டிவிட்டு செல்கிறார்கள். மேலும், டையிங் கழிவுகள் போன்ற தொழிற்சாலை கழிவு நீரும் ஆற்றில் விடப்படுவதால் அந்த வழியே செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இதுமட்டுமின்றி அப்பகுதி மக்கள் சுவாசக் கோளாறு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை மண்டல அலுவலகத்தில் மனு கொடுத்தும், இதுதொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதன்பின்னராவது இறைச்சி கழிவுகள் மற்றும் ஆலை கழிவுகளை கொட்டி செல்லும் நபர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.