தில்லி,

கடந்த ஆண்டில் பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தான் அதிகளவிலான மத கலவரங்கள் நடந்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் மக்களவையில் இன்று தெரிவித்தார்.

இன்று மக்களவையில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் , கடந்த 2017 ஆம் ஆண்டில் நடந்த 822 மத  கலவரங்களில் 111 பேர் பலியாகினர். 2384 பேர் காயமடைந்துள்ளனர்.

அதில்,  அதிகப்படியாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 195 மத கலவரங்கள் நடந்துள்ளது. இதில் 44 பேர் பலியாகினர். 542 பேர் காயமடைந்தனர்.

கர்நாடகாவில் நடந்த 100 மத கலவரங்களில் 9 பேர் பலியாகினர். 226 பேர் காயமடைந்தனர்.

ராஜஸ்தானில் நடந்த 91 மத கலவரங்களில் 12 பேர் பலியாகினர். மேலும் 175 பேர் காயமடைந்தனர்.

பீகாரில் நடந்த 85 மத கலவரங்களில் 3 பேர் பலியாகினர். மேலும் 321 பேர் காயமடைந்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் நடந்த 60 மத கலவரங்களில் 9 பேர் பலியாகினர். மேலும் 191 பேர் காயமடைந்தனர்.

மேற்கு வங்கத்தில் நடந்த 58 மத கலவரங்களில் 9 பேர் பலியாகினர். மேலும் 230 பேர் காயமடைந்துள்ளனர்.

குஜராத்தில் நடந்த 50 மத கலவரங்களில் 8 பேர் பலியாகினர். மேலும் 125 பேர் காயமடைந்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டில் நடந்த 703 மத கலவரங்களில் 86 பேர் பலியாகினர். 2321 பேர்காயமடைந்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டில் நடந்த 751 மத கலவரங்களில் 97 பேர் பலியாகினர். 2264 பேர் காயமடைந்துள்ளனர்  என தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.